இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ...உண்மையான வலைபூவிற்கு திரும்பி செல்ல வீட்டிற்கு செல் பொத்தானை கிளிக் செய்யவும்.....  

Monday, February 4, 2013

மன இறுக்கத்தை போக்கும் வாழைப்பழம்

எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் சாமான்ய மக்களும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம். இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள், வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன.

ஆப்பிளை விட சிறந்தது, பல வகை சத்துகளைக் கொண்டது

ஆப்பிளைவிட பலமடங்கு சிறந்தது வாழைப்பழம். கார்போஹைட்ரேட் ஆப்பிளில் உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாழைப்பழத்தில் உள்ளது. பாஸ்பரஸ் மூன்று மடங்கும் புரோட்டீன் அளவு இன்னும் அதிகமாக நான்கு மடங்கும் உள்ளது.. வைட்டமின் ஏ மற்றும் இரும்புசத்தின் அளவு ஆப்பிளில் உள்ளதைவிட ஐந்து மடங்கு இதில் அதிகமாக இருக்கிறது.

மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அளவு ஆப்பிளைவிட வாழைப்பழத்தில் இரண்டு மடங்கு கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் செறிவாக உள்ளது. ஒரு சராசரி வாழைப்பழத்தில் 23 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் சர்க்கரை, 2.6 கிராம் நார்சத்து ஒரு கிராம் கொழுப்பு மற்றும் 9 மில்லி கராம் வைட்டமின் சி உள்ளது. அதாவது உடலுக்கு கூட்டமளிக்கும் 90 கலோரிகள் இதில் உள்ளன.

நரம்புக்கு வலு சேர்த்து புத்துணர்ச்சி தரக்கூடியது

சர்க்ககரை பொருட்களான சுக்ரோஸ், பீக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை இதில் உள்ளது.. இத்துடன் எளிதில் ஜீரணத்தன்மை ஏற்படுத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உள்ளது. உலகின் தலைசிறந்த தடகள வீரர்கள் வாழைப்பழம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்..

பயிற்சியின் போது தங்களுக்கு ஏற்படும் சோர்வை வாழைப்பழம் நீக்கும் தன்மை கொண்டது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி நிரம்ப உள்ளது, இது நரம்பு மண்டலத்தில் வலு சேர்க்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் வாழைப்பழம் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாது..

மன இறுக்கத்தை போக்குகிறது, மலச்சிக்கலுக்கு அருமருந்தாகும்

பெரும்பாலான நோய்களுக்கு மூலக்காரணமாக திகழ்வது.. வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் மலக்குடலை சுத்தம் செய்யும் காரணியாக திகழ்கின்றன. இதில் உள்ள நார்சத்துகளை கருத்தில் கொண்டுதான் உணவு உட்கொண்டதும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மன இறுக்கத்தில் பாதிக்கப்பட்டோர் வாழைப்பழம் உட்கொண்ட பிறகு இறுக்க நிலையில் இருந்து மீண்டதாக தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழைப்பழத்தில் டிரைப்டோபன் என்ற வகை புரோட்டின் சத்து உள்ளது, இது உடலுக்குள் சென்றதும் செரோடோனின் ஆக மாறுகிறது. மனதை ரிலாக்ஸ் செய்யும் ஆற்றல் இதற்கு உள்ளது.

ரத்தகொதிப்பை சீராக்குகிறது.

மிகுதியான அளவு கொண்ட ரத்தக் கொதிப்பு பக்கவாதம் உள்ளிட்ட மோசமான பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் உப்பு அளவு குறைந்த தன்மை ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தி சீரான ரத்த ஒட்டத்திற்கு வழிவகுக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து காலையில் வெறும் வயிற்றில் சிலருக்கு பலவீனத்தையும் படபடப்பையும் ஏற்படுத்தும். வாழைப்பழத் துண்டுகள் சிலவற்றை உட்கொள்வதன் மூலம் இப்பிரச்சனையை தீர்க்கலாம்.

தோலுக்கு அருமருந்து, தலைசுற்றல் அகலும்

கொசு மற்றும் சிறிய பூச்சிகள் கடி காரணமாக தோலில் தடிப்புகள் ஏற்பட்டு நமைச்சலை உண்டாக்கும். இந்த பகுதிகளில் மருந்துகளை பூசுவதற்கு பதில் வாழைப்பழத் தோலின் உட்புறத்தோலை தேய்த்துப் பாருங்கள். வீக்கம் மற்றும் நமைச்சலுக்கு இது அருமருந்து.

வாழைப்பழம் தேன் மற்றும் பால் கலந்த ஜீஸ் தலைசுற்றலை உடனே விரட்டும் வயிற்றை இதப்படுத்தும் குணம் வாழைப்பழத்திற்கு உண்டு மேலும் தேனுடன் இணைந்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. பாலுடன் சேர்ந்து உடலுக்கு போஷாக்கும் கொடுக்கிறது.

உடல் சூட்டை குறைக்கும், வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.

வயிற்றுப்புண்ணுக்கு(அல்சர்) கொண்டோர் காரமாக எண்ணெய்யில் பொரித்த பண்டங்களோ சாப்பிடக்கூடாது. இத்தகையோர்க்கு மென்மையான சுவைமிகுந்த வாழைப்பழம் ஒர் அற்புதமான உணவுப்பொருளாகும். நெஞ்செரிச்சலுக்கு காரணமான அமிலத்தன்மையும் இது கட்டுப்படுத்துகிறது.

வாழைப்பழம் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழ வகையாகும். உடல் சூட்டை குறைப்பதோடு மன இருக்கத்தையும் போக்குகிறது. இதில் உள்ள நோய் எதிர்ப்பு சத்துப்பொருட்கள், பருவகால மாற்றங்களால் ஏற்படும் நோய் தொற்றுகள் உடலை அண்டாமல் பாதுகாக்கின்றன.

நிக்கோடினில் இருந்து பாதுகாக்கிறது.

புகைபிடிக்கும் பழக்கம் உடைய சிலர் அப்பழக்கத்தை திடீர் என விட்டு விடுவர். இவ்வாறு விடுவது தான் சிறந்தது. இப்பழக்கம் காரணமாக நிக்கோடின் என்ற நச்சுபொருள் ஏற்கனவே உடலில் சேர்த்திருக்கும். வாழைப்பழத்தில் உள்ள பி6, பி12 வைட்டமின், பொட்டாசியம் மெக்னீசியம் ஆகிய சத்துப்பொருட்கள் இந்த நிக்கோடினை கொஞ்சம் கொஞ்சமாக உடலில் இருந்து அகற்றிவிடும்.